வியாழன், 23 ஜூலை, 2015

செயற்கை கருத்தரிப்பு முறையில் பெண்ணிற்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை: குரு மருத்துவமனை சாதனை

வியாழன் 23, ஜூலை 2015 7:51:56 PM (IST)
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் குரு மருத்துவமனை தூத்துக்குடியில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை தொடங்கப்பட்ட சில மாதங்களில் செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து குரு மருத்துவமணையின் தலைமை மருத்துவர் கல்பனா கூறியதாவது : தூத்துக்குடியில் குரு மருத்துவமனை தொடங்கப்பட்ட சில நாட்களிலேயேயே தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் எங்களது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். தங்களுக்கு திருமணமாகி 21 ஆண்டுகளாகியும் பல்வேறு சிகிசிச்சைகள் பெற்றும் குழந்தை இல்லாத காரணத்தினால் எங்களை அணுகினர்.


அவர்களை பரிசேதானை செய்த பின்னர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டது. அதில் வெற்றியடைந்த பின்னர் குழந்தையின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டது. கடந்த16ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் எடை 3 கிலோ உள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.


தூத்துக்குடியில் குரு மருத்துவமனை தொடர்ந்து செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தைகள் பிறந்துள்ளதில் பெருமை அடைகிறோம். மேலும், கருமுட்டை குறைபாடு, விந்தணு குறைபாடு, கருகுழாய் உடைப்பு, கர்ப்பப் பை குறைபாடு, கட்டிகள், மாதவிடாய் நின்றவர்களுக்கு கூட செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முடியும் என்றார் டாக்டர் கல்பனா.